ரியோ டி ஜெனிரோ,
பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் பலியாகினார்கள்.பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடை பெறுவதால் அங்குள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் அமேசோனாஸ் மாநிலத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
அதில் ஒரு சிறையில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். மற்ற சிறைகளில் 25 பேர் பலியாகினர். ஆக மொத்தம் 40 கைதிகள் கொல்லப்பட்டனர்.தாக்குதலுக்கு துப்பாக்கிகள் அல்லது கத்திகளை பயன்படுத்தவில்லை. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே அதிக கைதிகள் நிறைந்த சிறையாக பிரேசில் திகழ்கிறது. இங்கு மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 49 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்