கொழும்பு,
முன்மொழியப்பட்டுள்ள சோபா எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் இலங்கைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்களுடன் தொடர்புடையது.
இதனால் இலங்கைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. இரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தால் அது இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு நடக்கும் முறை தொடர்பாக உடன்பாட்டின் உட்பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் வெளிப்படையாகக் கலந்துரையாடி இணக்கம் காணப்படும். உடன்பாடு விஷயத்தில் இரு தரப்புகளுக்கும் சரியான புரி தல் இருந்தால் பிரச்சினைகளை குறைக்க முடியும் என்றார் அவர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்