லண்டன்,
ஐரோப்பா தொடர்பான சிக்கலில், கன்சர்வேடிவ் கட்சியினரால் பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகிறார் தெரசா மே.மார்கரெட் தாட்சரை போன்று நிலையான ஓர் இடத்தை பிடித்த தலைவர்கள் பட்டியலில் தெரசா மேவும் இணைகிறார்.
2016 ஜூலையில் பிரதமர் அலுவலகம் இருக்கும் டவுனிங் தெருவில் அவர் நுழைந்தபோது அவர் என்ன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ நிச்சயமாக அதை ஏற்படுத்த முடியவில்லை.அவர் பிரதமராக பதவி ஏற்ற போது செய்ய திட்டமிட்டிருந்த, பிரிட்டிஷ் சமூகத்தில் நிலவும் ‘‘அநீதிகளை" சரி செய்ய வேண்டும் என்பன போன்ற கொள்கைகள் எல்லாம் பிரிக்ஸிட் என்ற ஒற்றை வார்த்தையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் பிரிட்டனின் முடிவு, தனக்கு முன் பிரதமராக இருந்த டேவிட் கேமரன் காலத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கேற்பு வாக்கெடுப்பின் முடிவுகளை செயல்படுத்துவதற்காக அவர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சி ஆகியவைதான் தெரசா மேவின் மூன்று வருட கால பிரதமர் பதவியை விளக்குகிறது.
பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான போராட்டம்,நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் பதவி விலகல், நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் அவருக்கு பின்னடைவை வழங்கின.ஒரு தருணத்தில், தன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் பொருட்டு, தன் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அடுத்த 2022-ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தான் பதவி விலகுவதாக உறுதியளிக்க வேண்டிய சூழ்நிலையையும் அவர் எதிர்நோக்கியிருந்தார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை தள்ளி வைத்த அவருக்கு, அவரின் கன்சர்வேடிவ் கட்சி அவர் பதவியில் தொடர்வதை விரும்பவில்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் பிறகு, அவர் நேசித்த பணியில் தொடர முடியாது என அவர் ஒப்புக் கொண்டார். மேலும் டவுனிங் தெருவில் தனது பணி நிறைவடைந்தது என்றும் ஒப்புக் கொண்டார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகப் போவதாக அறிவித்த அவர், தான் பதவி விலகப்போவதாக அறி வித்த அந்த தருணத்தில் உடைந்துவிட்டார். வரும் ஜூன் 7-ஆம் தேதி அவர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்