img
img

அதிவேக புல்லட் ரயில்  சோதனை ஓட்டம் துவக்கம்
திங்கள் 27 மே 2019 12:29:00

img

தோக்கியோ,

ஜப்பான், தோக்கியோவில் மணிக்கு 360 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘என்-700’ என்ற புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கியது.அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி ஜே.ஆர்.சென்ட்ரல் நிறுவனம் 220 கோடி டாலர் செலவில் புதுமையான வடிவமைப்புடன் அதிவேக புல்லட் ரயிலை உருவாக்கியுள்ளது.

இந்த ரயிலின் சோதனை ஓட்டம் மைபரா மற்றும் கியோட்டோ நகரங்களுக்கு இடையே நடைபெற்றது. அடுத்த மாதம் வரை இந்த புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன் பின் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். அப்போது மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்படும். இரு வாரங்களுக்கு முன் ஜப்பானில் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘ஆல்பா-எக்ஸ்’ புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கியது. ஜப்பானில் 1964-இல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது தான் முதன்முதலாக அதிவேக புல்லட் ரயில் போக்குவரத்து அறிமுகமானது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img