கோலாலம்பூர், ஜன. 10- வரும் தைப்பூச திருவிழாவின் போது ஆபாசமாக உடையணியும் பெண்கள் மீது சாயம் பூசவிருப்பதாக மிரட்டியுள்ள தரப்பினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முகநூலில் பரவிவரும் இது தொடர்பான பதிவேற்றங்கள் தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர், ஆணையர் டத்தோ அப்துல் சாமா மாட் நேற்று கூறினார். நாங்கள் முறையான நடவடிக்கை எடுப்போம். அவர்கள் செய்ய திட்டமிட்டிருப்பது சட்டத்திற்கு விரோதமான செயலாகும். இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். தைப்பூசத்தன்று போலீசார் முழுமூச்சாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவர். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். தைப்பூசத்தன்று சாயம் பூசுவோம் என்ற அந்த அகப்பக்கதை உருவாக்கிய தரப்பினரையும், அதன் பதிவுகளையும் போலீசார் தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தகவல் தெரிந்தவர்கள் போலீசுக்கு உதவ முன்வர வேண்டும் என்று அப்துல் சாமா வலியுறுத்தினார். 03-2052 9999 என்ற தொலைபேசி எண்ணில் போலீசாருடன், அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஹென்ரி பார்னபாஸ் என்பவர், தைப்பூச சாயம் பூசும் குழு என்ற பெயரில் முகநூல் அகப்பக்கத்தை உருவாக்கியுள்ளார். தைப்பூசத்தின் போது அநாகரிகமாக அல்லது ஆபாசமாக உடுத்தும் பெண்கள் மீது ஸ்ப்ரே சாயம் பூசவிருப்பதாக அதன் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் முதுகுப்புறத்தைக் காட்டும் பல்வேறு சாரி பிளவுஸ்களின் படங்களும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பத்துமலை ஆலய நிர்வாகமும் இச்செயலை கண்டித்துள்ளது. சமய விழாவின்போது பெண்கள் அநாகரிகமாக உடுத்தக்கூடாது என்று அவர்கள் நினைத்தால் அது பற்றி தாராளமாக சொல்லலாம். ஆனால், சாயம் பூசுவோம் என்று மிரட்டுவது வேறு பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்று ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய டிரஸ்டி டத்தோ என்.சிவகுமார் கூறியதாக தி மலேசியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வேறு வழிகளில் அவர்கள் இந்த தகவலை பரப்பலாம். இப்படி சட்டத்தை மீறும் செய்கை வரவேற்கக்கூடியது அல்ல. சட்டமும் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் கருத்துரைத்தார். ஆலயங்கள் அல்லது சமய நிகழ்வுகளுக்கு வரும்போது முறையாக ஆடையணிந்து வர வேண்டும் என்று எங்களால் ஆலோசனை சொல்லத்தான் முடியும். ஆனால், இறுதியில் பார்த்தால் அது அவரவர் சொந்த விருப்பத்தை பொறுத்துள்ளது என்றார் அவர். அதே சமயம், மது போதையில் விழாவில் கலந்து கொண்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தரப்பினருக்கு எதிராக போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவகுமார் எச்சரித்தார்
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்