லண்டன்,
கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் சரிவர வளர்ச்சியடையாத முதுகெலும்பை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சாதனை படைத்துள்ளனர் லண்டன் மருத்துவர்கள்.லண்டனில் உள்ள மேற்கு சாசெக்ஸ் பகுதியில் வசிப்பவர் ஷெர்ரி ஷார்ப் 29. கர்ப்பிணியான இவர் வழக்கமான பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள் ஷெர்ரியிடம் குழந்தையின் முதுகெலும்பு சீராக இல்லை. இதனால் முடக்குவாதம் ‘குடல் நோய்’ கால்களில் உணர்வு இழப்பு மற்றும் சீறுநீரக பிரச்சினைகள் ஏற்படும்.
அத்துடன் மற்ற குழந்தைகளைப் போல் நடக்க முடியாது. இதை அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளனர். இதை யடுத்து கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். அறுவை சிகிச்சை முடிந்து 6 வாரங்களுக்கு பின் ஷெர்ரி பிரசவித்தார். ஜாக்சன் என பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனர் நாட்டில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதன்முறை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்