வாஷிங்டன்,
கைகள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் கால்களால் ஓவியம் தீட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். கார் ஓட்டி சாதனை புரிந்தவர்களையும் நாம் அறி வோம். ஆனால், இங்கு ஒரு பெண் கைகள் இல்லாமல் கால்களால் விமானமே ஓட்டுகிறார்.
ஆம். அமெரிக்காவின் அரிஸோனாவைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ் (30). இவர் ஒரு பெண் விமானி. ஜெசிகா பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவராவார். இதனால் பெற்றோர் கடும் வேதனைக்கு உள்ளாகினர். ஆனால், ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும் அவர்களை சந்தோஷப்படுத்தின. ஜெசிகாவின் சிறு வயதில், உறவினர் ஒருவருடன் விமானத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்று முதல் விமானத்தின் மீதும் விமானி பணி மீதும் தீராத ஈர்ப்பு கொண்டுள்ளார். ஜெசிகா பட்டப் படிப்பை முடித்த பின்னர், இதற்கான பயிற்சி பெற விரும்பினார்.
சரியான பயிற்சியாளர், முறையான வழிமுறைகள் ஆகியவை கிடைக்கவே வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பின்னர் கடும் பயிற்சி மேற்கொண்டு, கடந்த 2008-ஆம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார். இதனால் கைகள் இன்றி விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி எனும் சாதனை புரிந்தார். ஜெசிகா விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல், கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் என அனைத்து துறைகளிலும் வித்தைகளை கற்றுக் கொண்டவர் ஆவார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்