செவ்வாய் 22, அக்டோபர் 2019  
img
img

டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்
திங்கள் 20 மே 2019 11:54:54

img

லண்டன்,

இங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36-வது வயதில் 1997ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். ஒட்டு மொத்த மனித குலத்தின் அன்பை ஒருசேரப் பெற்றிருந்த அவர் மரணித்தது, உலக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் இறந்தது பல்வேறு சர்ச்சைகளை அப்போது கிளப்பியது. சார்லஸ்-டயானா தம்பதியின் மகன்களான இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் தங்கள் தாயின் மரணம் குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை.இந்த நிலையில் தற்போது பி.பி.சி. டி.வி. தயாரித்துள்ள மனநலம் பற்றிய ஆவணப்படத்தில் இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில் அவர், என் அம்மா டயானா இறந்தபோது பிற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன். கடினமான தருணங்களில் இங்கி லாந்து மரபுப்படி வாய் திறந்து பேசுவதில்லை. சற்று அதில் இருந்து வெளியே வர வேண்டும் அல்லவா? நாம் ஒன்றும் ரோபோக்கள் இல்லையே. வாய் திறந்து நமது உணர்வுகளை சொல்லித்தானே ஆகவேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபற்றி நான் நிறைய யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நான் ஏன் அப்படி உணர்ந்தேன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் மிக இளம் வயதில் நாம் இருக்கிறபோது, நமது அன்புக்குரியவர்கள் மரணத்தை தழுவினால் அடைகிற மன வலி பிற வலிகளைப்போல இல்லை என்றார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img