சிட்னி,
ஆஸ்திரேலியாவில் நேற்று முன் தினம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கெனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும் பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 76 இடங்களில் வென்றாக வேண்டும். இந்த தேர்தலில் பருவ நிலை மாற்றம், வெள்ளம், காட்டுத் தீ, வறட்சி ஆகியவை முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தன. அதன் அடிப்படையில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 64 லட்சம் பேர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 18 வயது நிறைவு அடைந்தவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். வாக்களிக்கத் தவறினால் அவர்களுக்கு 20 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை உள்ளது.
இந்நிலையில் கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கி பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் முடிவை தொடர்ந்து தொழிற்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சார்ட்டன் அதிரடியாக விலகினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்