கோலாலம்பூர், ஜன. 10- டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நான்காண்டுகளுக்கு முன்பு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த லோரி ஓட்டுநர் ஒருவர் மருத்துவ கவனிப்பின்மை காரணமாக மரணமடைந்தார் என்பதால் அவரின் மரணத்திற்கு போலீசாரே காரணம் என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. லோரி ஓட்டுநர் பி.சந்திரனின் மனைவி என்.செல்விக்கும், அவரின் மகள் சி.ரீத்தாவிற்கும் இழப்பீடாக வெ. 357,000 வழங்க நீதிபதி எஸ்.நந்தபாலம் தீர்ப்பளித்தார். செலவுத் தொகையாக மேலும் வெ.50,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது. மரணமடைந்த சந்திரனை சிகிச்சைக்கு அனுப்பி வைக்க போலீஸ் அதிகாரி தவறி விட்டார் என்றும் அவரின் அலட்சிய உணர்வையே இது காட்டுகிறது என்றும் நந்தா கூறினார். இழப்பீடாக வழங்கப்பட்ட தொகையில் 5 விழுக்காடு வட்டியையும் நீதிபதி விதித்தார். வழக்கு நீதிமன்றம் வந்த நாள் முதல், தீர்ப்பளிக்கப்பட்ட தொகை செலுத்தி முடிக்கப்படும் வரையில் வட்டி கணக்கெடுக்கப்படும். சந்திரனின் உயிரும், அவரின் சுதந்திரமும் பறிபோனதற்கு போலீஸ் காரணமாகி விட்டது. அது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதால் வருந்தக்கூடிய துக்ககரமான செயலாக இது அமைந்துள்ளது. அது மட்டுமின்றி, சந்திரனின் மரணத்திற்கு எந்த போலீஸ்காரர் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். சந்திரனின் மருத்துவ தேவைகளை கவனிக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் மஹிஸல் முகமட் நோவிற்கு ஒரு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டும் அவர் அவ்வாறு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது. அதே சமயம், சந்திரனின் மரணத்தை விசாரிக்கும்படி பணிக்கப்பட்ட மற்றொரு அதிகாரியான இன்ஸ்பெக்டர் முகமட் சாய்டோன் ஷாரி தனது பணியை சரிவர செய்யவில்லை என்று நாதன் குறிப்பிட்டார். சந்திரனுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று அவரின் மனைவி தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கும் அவ்விரு போலீஸ் அதிகாரிகளும் தங்கள் கடமையில் தவறி விட்டனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வழக்கு கடந்த 2014-இல் பதிவு செய்யப்பட்டது. ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான சந்திரன், கடந்த 2012 செப்டம்பர் 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டு டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். ஒரு கடத்தல் சம்பவத்தில் சந்தேகப்பேர்வழியாக அவர் கைது செய்யப்பட்டார். தடுப்புக்காவலில் இருந்த போது, அவரின் குடும்ப உறுப்பினர்கள் கொண்டு வந்த மருந்துகளை அவர் உட்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவ்வழக்கில், செல்வி மற்றும் ரீத்தா சார்பில் வழக்கறிஞர்கள் எம்.விஸ்வநாதன், எஸ்.நந்தகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்