img
img

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை 
சனி 18 மே 2019 14:34:49

img

தெஹ்ரான், 

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷரிப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. இது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும். அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது. 

ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும். இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும் போர் விமா னங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது.

இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்த நாட்டுடன் வர்த்தக ரீதியில் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு சென்று வருகிறார்.  ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரிப்பிடம் ஜப்பான் பத்திரிகைகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பின.  இதற்கு ஷரிப்,  அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று கூறியதாக முன்னணி பத்திரிகை கியோடோ செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கி டையிலான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வாய்ப்பில்லை.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img