img
img

5 இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார்     
சனி 18 மே 2019 13:18:00

img

பெர்லின், 

5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி குறுகிய தூர வான்வ ழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், ஜெர்மனியைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் காரை 2025ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறு வனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார்  ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img