காபுல்,
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலிபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறபோதும், தலிபான்களின் அட்டூ ழியம் குறைந்தபாடில்லை. தலிபான்களுக்கும் ஆப்கான் வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் அவர்களின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் சாய்வாரா என்ற நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 10 பயங்கரவாதிகள் பலியாகினர். அதே சமயம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிர் இழந்தனர். 3 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையில் பால்க் மாகாணத்தின், பால்க் மாவட்டத்தில் உள்ள தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவர் உள்பட 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்