திங்கள் 18, நவம்பர் 2019  
img
img

பாகான் டத்தோக் மாவட்டமாக பிரகடனம்
செவ்வாய் 10 ஜனவரி 2017 15:27:22

img

பாகான் டத்தோக், ஜன. 10- பேரா மாநிலத்தின் 12-ஆவது மாவட்டமாக பாகான் டத்தோக் நேற்று மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவினால் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டது. அவரின் துணைவியார் துவாங்கு ஸாரா சலிம் இச்சடங்கில் கலந்து சிறப்பித்தார். துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அடங்குவர். பாகான் டத்தோக் அறிவியல் இடைநிலைப் பள்ளியில் நடந்த இந்த வரலாற்றுபூர்வ நிகழ்வில் 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார மக்களும் கலந்து கொண்டனர். இதுவரை பாகான் டத்தோ (Bagan Datoh) என்றிருந்த இம்மாவட்டம் பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்டு இனி பாகான் டத்தோக் (Bagan Datuk) என்றழைக்கப்படும். சுமார் 94,969 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 70,300 ஆகும்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
கோர விபத்து! இரண்டு மாத கைக் குழந்தை தாயின் மடியில் மரணம்!

நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை ...

மேலும்
img
14 ஆண்டுகளில் 256 பேர் போலிஸ் காவலின்போது மரணம்?

போலீஸ் காவலின் போது மரணமடையும் ..

மேலும்
img
எம்எச் 370 தேடுதல் படலம் தொடருமா -தொடராதா?

எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன

மேலும்
img
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! 200க்கும் மேற்பட்டோர் பத்துமலையில் திரண்டனர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img