வாஷிங்டன்,
ஜூன் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதினையும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். ஜப்பானில் அடுத்த (ஜூன்) மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு இடையே, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்திக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் முற்றிவரும் இந்த சூழலில், இரு தலைவர்களின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், நீங்கள் அறிந்து இருந்தப்படியே, அடுத்த (ஜூன்) மாதம் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபரையும், ரஷ்ய தலைவரையும் சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும் என்று நான் கருது கிறேன் என்றார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்