கொழும்பு,
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் நேற்று முன்தினம் வெடித்த மோதலை தொடர்ந்து 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்பில்கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் ஹெட்டிபொல பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது.
இதைதொடர்ந்து, குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பகுதிகளுக்கு உடன் அமலாகும் வகையில் போலீசாரின் ஊர டங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்