லண்டன்,
இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும் ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது.
இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையில், அந்த வழியாக காரில் பயணித்தவர் சாலையில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டார். அவர்கள் மீட்கப்பட்ட சில நொடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. எனினும் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்