அபுதாபி,
புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு சிற்றரசு தெரி வித்தது. ஐக்கிய அரபு சிற்றரசின் ஓமன் வளைகுடா பகுதியில் ஃபுஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள் வந்து செல்கின்றன.
இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டுக் கப்பல்கள் மீது நேற்று முன்தினம் காலையில் நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு சிற்றரசு தெரிவித்தது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவை போன்ற கூடு தல் தகவல்களை வெளியிடவில்லை.
அதே சமயம் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புஜைரா துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டின் 2 சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் கப்பல்கள் சேதம் அடைந்ததாகவும் சவூதி அரேபியா நேற்று தெரிவித்தது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்