img
img

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதை மீண்டும் திறக்கப்படுமா?
செவ்வாய் 14 மே 2019 18:24:17

img

லாகூர், 

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை மீண்டும் திறந்து விடுவது பற்றி பாகிஸ்தான் 15ஆம் தேதி முடிவு செய்கிறது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன. 

இந்த சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது வான்வழிப் பாதையை முற்றிலுமாக மூடிவிட்டது. பின்னர், மார்ச் 27ஆம் தேதி, மீண்டும் திறந்தது. இந்த தடை காரணமாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழிப் பாதையை மீண்டும் திறந்து விடுவது குறித்து 15ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் சிவில் விமான போக்கு வரத்து ஆணைய செய்தித்தொடர்பாளர் முஜ்தாபா பைக் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அவர்களின் அமைச்சக அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். இந்திய விமானங்க ளுக்கு தடையை நீக்கலாமா? தொடரலாமா? என்பது பற்றி முடிவு எடுக்கப்படும். அதே நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img