பெர்லின்,
ஜெர்மனியின் பிராங்க்பெர்ட் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். விமான ஓடுபாதையில் அருகே ஆளில்லா விமானம் ஒன்று பறந்ததால் ஒரு மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.விமான நிலைய தரப்பினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்திற்குப் பின் விமான நிலையம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கி யுள்ள நிலையில் ஆளில்லா விமானம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிகப்டர் மூலம் விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் தந்தவர்களை தேடி வருகின்றனர். ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான பிராங்பெர்ட் விமான நிலையம் 2017ஆம் ஆண்டில் 64 மில்லியன் பயணிகளுக்கு சேவையாற்றி உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் விமான நிலைய ஓடுபாதை அருகே ஆளில்லா விமானம் இயக்கத்தை தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்