கொழும்பு,
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரத்தில் இருபிரிவினருக்கு இடையில் கலவரம் ஏற்பட்டதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கட லோர நகரமான சிலாபம் நகரில் நேற்று இருதரப்பினருக்கு இடையில் கலவரம் வெடித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்