img
img

பொதுமக்கள் வெடிகுண்டுகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க இலங்கை அரசு உத்தரவு
திங்கள் 13 மே 2019 15:22:33

img

கொழும்பு, 

சட்டவிரோத முறையில் வெடிகுண்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி இலங்கை அரசு உத்தரவிட்டு உள்ளது. 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ ஆலயங்கள் மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதில் 253 பேர் உயிரிழந்தனர்.  500 பேர் வரை காயமடைந்தனர்.  அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் பலியானவர்களில் 10 இந்தியர்கள் மற்றும் 40 வெளிநாட்டினரும் அடங்குவர்.  தாக்குதல்களுடன் தொடர்புடைய ஆசிரியர், மருத்துவர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து வீடுகளில் நடந்த தேடுதல் வேட்டையில் வாள் மற்றும் பிற ஆயு தங்களை போலீசார் கைப்பற்றினர்.  இதில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், இலங்கை அரசு புதிய அறி விப்பினை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, இலங்கையில் சட்டவிரோத வெடிகுண்டு பொருட்கள் பற்றிய தகவலை மற்றும் அவற்றை வைத்திருக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க இன்று காலை 6 மணியில் இருந்து 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது போன்ற வெடிகுண்டுகளை வைத்துள்ள தனிநபர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில்  14ஆம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 6 மணிக்கு முன் இதுபற்றி போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img