புதன் 23, அக்டோபர் 2019  
img
img

தேனிலவுக்காக இலங்கை சென்ற மணப்பெண் பலி
திங்கள் 13 மே 2019 15:16:51

img

லண்டன், 

இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் மணப்பெண் உயிரிழந்ததால், அவரின் கணவர் திரும்பிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. 

இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு லண்டனில் வசித்து வருபவர் கிலான் சந்தாரியா (வயது 33). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உஷெய்லா பட்டேல் (31) என்பவரை திருமணம் செய்தார். 4 நாட்கள் கழித்து இவர்கள் தேனிலவுக்காக இலங்கை புறப்பட்டுச் சென்றனர். அங்குள்ள காலே என்ற இடத்தில் ஒரு கடற்கரை விடுதியில் தங்கினார்கள். அப்போது அவர்கள் சாப்பிட்ட உணவு விஷமானதாகத் தெரிகிறது. 

இதனால் இருவருக்கும் காய்ச்சல் மற்றும் ரத்தவாந்தி ஏற்பட்டது. உடனே அவர்கள் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உஷெய்லா பட்டேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிகமாக வாந்தி எடுத்ததால் நீர்சத்து குறைந்து மரணம் ஏற்பட்ட தாக கூறப்பட்டுள்ளது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை முடியும் வரை கிலான் சந்தாரியா லண்டன் திரும்ப தடை விதித்துள்ளனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
img
அதிபரும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார் 

வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு

மேலும்
img
இலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு

இந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்

மேலும்
img
இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு  கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை!

- மருத்துவர் கைது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img