காபுல்,
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாச்சார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரின் உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்க ளில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்