இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நக ரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்ப வத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப் பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்