மணிலா,
பிலிப்பைன்ஸ் அதிபரின் பிரச்சார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. பிலிப்பைன்சில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிபர் ரோட்ரிகோ டுதர்தே நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், போஹால் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிச்ரசார கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ டுதர்தே கலந்துகொண்டு உரை யாற்றினார். அவர் எதிர்க்கட்சிகள் குறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது, கரப்பான் பூச்சி ஒன்று அவரது வலது தோள்பட்டையின் மீது வந்து அமர்ந்தது.
இதனை பார்த்ததும், அதிபரின் பெண் உதவியாளர், தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட முயன்றார். ஆனால் அது, அதி பரின் தோள்பட்டையில் மேலும், கீழுமாக ஓடி ஆட்டம் காட்டியது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோட்ரிகோ டுதர்தே, தனது கையால் கரப்பான் பூச்சியை தட்டிவிட்டுவிட்டு, இது எதிர்க்கட்சியின் சதி என நகைச்சுவையாகக் கூறி, பேச்சை தொடர்ந்தார். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்