வாஷிங்டன்,
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பள்ளியின் மாணவன் பலியாகியுள்ளான். மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள ஸ்டெம் பள்ளியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 18 வயதுடைய மாணவன் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த மாணவர்கள் ஹைலேண்ட் ரஞ்சில் உள்ள நார்த்ரிட்ஜ் ரைசிங் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு குறித்த தகவலறிந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பள்ளிக்கு முன் கூடினர். சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட இளைஞரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், சம்பவ இடத்திலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்