உள்ளான்பத்தர்,
மங்கோலியா நாட்டில் அணிலை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதனை உண்ட தம்பதியர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல் நலனில் ஆர்வம் காட்டும் நம்மில் பலர், தொடர்ந்து அந்த வழிமுறைகளை கடைப்பிடிப்பதும் கடினம் என்பதையும் மறுக்க முடியாது.
மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உண்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து விட்டார். அவரின் மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்ப டுத்தப்பட்டார். கடந்த மே 1 ஆம் தேதி அவரும் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்க ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்