வாஷிங்டன்,
மனிதர்கள் குறுகலான பாதையில் நடக்கும் போது நிதானமாக செல்வதை போல, ரோபோ ஒன்று முதன்முறையாக குறுகலான பாதையில் பேலன்ஸ் செய்து நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது. பல நாடுகளிலும் மனிதனை ஒத்திருக்கக் கூடிய மற்றும் மனிதனின் செயல்களை செய்யக்கூ டிய ரோபோக்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நிஜ வாழ்வில் ரோபோக்களின் செயல்பாடுகளை தானே இயங்குவதை நடைமுறைப்படுத்தவும் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சர்வதேச ரோபோ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று மனிதர்களை போல இயங்கும் ரோபோக்களை தயாரித்து வருகிறது.
இந்த ரோபோவின் ஒவ்வொரு பயிற்சியும் சமூக வலைதளத்தில் அப்டேட்டாக வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மிகவும் குறுகலான பாதையில் செல்ல நடை மேடை போடப்பட்டுள்ளது. அந்த பாதையில் சிறிதும் தடுமாற்றம் இன்றி ப்ரோகிராம் செய்ததை போலவே இந்த ரோபோ சரியாக அடிமேல் அடிவைத்து நகர்ந்து பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்