விண்ட்ஹோக்,
தென்மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமிபியாவில் கடுமையான பஞ்சம் நிலவுவதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நமிபியா நாட்டில் சுமார் 25 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். தனிநபர் வரு மானத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நமிபியாவில் பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கடுமையான பஞ்சம் மற்றும் பசி, பட்டினியால் மக்கள் திண்டாடுவது தவிர்க்க முடியாத வாழ்வியல் சூழலாக உள்ளது.
அவ்வகையில், இந்த ஆண்டும் போதிய அளவில் பருவமழை பெய்யாததால் மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசர நிலை சட்டத்தை அந்நாட்டின் அதிபர் ஹகே ஜின்கோப் பிரகடனப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் தொடர்பாக விரிவான கணக்கெடுப்பு நடத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்