img
img

அமெரிக்கா-சீனா மோதல் போக்கால் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் 
வியாழன் 09 மே 2019 19:07:09

img

பாரிஸ், 

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் வரிவிதிப்பு தொடர்பான மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. 

இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வரியை  அமெரிக்கா, உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று  முன்தினம் அறிவித்தார். சுமார் 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த புதிய வரிவிதிப்பு முறை வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.  

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) அமைப்பின் தலைவர் கிறிஸ்ட்டைன் லகர்டே, அமெரிக்கா, சீனா இடையில் வரிவிதிப்பு தொடர்பாக அதிகரித்துவரும் மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்க ப்பட்ட அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img