சிட்னி,
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மீது முட்டை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் வரும் 18ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அல்புரியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஸ்காட் மாரிசன் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து, அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பொதுமக்களுடன் உரையாடினார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், ஸ்காட் மாரிசன் மீது முட்டையை வீசினார். அந்த முட்டை பிரதமர் தலையை உரசியபோதும், உடையவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அருகில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி தடுமாறி விழுந்தார். அப்போது தன் மீது முட்டை வீசப்பட்டதையும் பொருட்படுத்தாமல், கீழே விழுந்த மூதாட்டிக்கு, பிரதமர் ஸ்காட் மாரிசன் உதவி செய்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்