img
img

டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய விநோத திருடன் 
வியாழன் 09 மே 2019 19:01:19

img

சிட்னி, 

ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். 

பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக  முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான்.  

திருடர்கள் முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தோ, அல்லது கர்ச்சீப் கட்டி கொண்டோ தான் திருட்டில் ஈடுபடுவர். அப்படி ஒரு திருடன் ஆஸ்திரேலியாவில்  விநோதமாக திருடியுள்ளான். 

ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராத்பைன் பகுதியில் உள்ள கடைத்தெருவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்து கொண்டு நள்ளிரவில் திருடச் சென்றுள்ளான். அங்கிருந்த வாட்ச் கடையின் கண்ணாடியினை உடைத்து அதன் அருகே வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வாட்சுகளை திருடிச் சென்றான். 

மேலும் அருகிலிருந்த எலக்ட்ரானிக் கடையில் இருந்த சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றான். இவை அனைத்தும் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.  

கடையின் வெளியே வந்த போது, கையில் இருந்த பொருள் கீழே விழுந்ததை எடுக்க குனிந்தான். அப்போது அந்த முகமூடி கீழே விழுந்தது. இதனையடுத்து அந்த நபரை அடையாளம் கண்ட  போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.  

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img