வெலிங்டன்,
பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தனது நீண்டநாள் காதலருடன் திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது.
இதனால் அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் அதே ஆண்டு மார்ச் மாதம் பதவி விலகினார். அதனை தொடர்ந்து, அக்கட்சியின் செல்வாக்கு மிக்கவரும் ஆக்லாந்தின் ஆல்பர்ட் மவுண்ட் தொகுதியின் எம்.பி.யுமான ஜெசிந்தா பிரதமராக பதவி ஏற்றார். 37 வயதில் பிரதமரானது மூலம் மிக இளம் வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை அடைந்தார்.
பெண்ணியவாதியான ஜெசிந்தா பிரதமர் ஆவதற்கு முன்பு, தனியார் தொலைக்கட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டுடன் காதல் வயப்பட்டார்.அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த இந்த ஜோடிக்கு காதல் பரிசாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2ஆவது பிரதமர் என்ற பெருமையை ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகி ஸ்தானில் பிரதமராக இருந்த பெனாஸிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜெசிந்தா மற்றும் கிளார்க் கேபோர்டு ஆகிய இருவரும் திருமணத்துக்கு நிச்சயம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்