img
img

வடகொரிய தலைவரை சந்தித்துப் பேச தயார்
சனி 04 மே 2019 15:55:33

img

தோக்கியோ, 

ஜப்பான்-வடகொரியா இடையிலான நீண்டகால மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வடகொரிய தலைவரை எந்தவித நிபந்த னையும் இன்றி சந்தித்துப் பேச தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார். 

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்-வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இடையில் நடந்த 2ஆவது பேச்சுவார்த்தை எதிர்பா ராதவிதமாக தோல்வியில் முடிந்தது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

இந்த சூழலில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசி, கொரிய தீப கற்ப பிரச்சினையில் தனக்கு ஆதரவு கோரினார். இந்த நிலையில், ஜப்பான்-வடகொரிய இடையிலான நீண்டகால மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை எந்தவித நிபந்தனையும் இன்றி சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார். 

தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது இதுபற்றி அவர் கூறுகையில்,  வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்தித்து திறந்த மனதுடன், வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன் என்றார். 

மேலும், கிம் ஜோங் உன்னை நேரில் சந்தித்து பேசாமல் ஜப்பான், வடகொரியா இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையை நாம் உடைக்க முடி யாது எனவும் அவர் கூறினார். கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேச, ஷின் ஜோ அபே விருப்பம் தெரிவித்திருப்பது தொடர்பாக வடகொரியா உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img