நியூயார்க்,
பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ஸுகர் பெர்க் தன் மனைவி இடையூறு எதுவும் இன்றி தூங்குவதற்கு ஒளிரும் மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ஸுகர் பெர்க் உயிருடன் இருக்கும் தன் மனைவிக்காக மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.
மார்க் ஷூகர் பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா. இரவு நேரத்தில் இவர் இடையூறு எதுவும் இன்றி தூங்க வசதியாக ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டியை மார் தயாரிக்கிறார். தூங்கும் போது அந்த பெட்டிக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.
காலையில் அவர் கண் விழித்து எழ வசதியாக 6 மணி மற்றும் 7 மணிக்கு பெட்டியில் இருந்து மங்கலான ஒளி கிளம்புகிறது. ஏனெனில் அப்போதுதான் ஸுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள். இந்த பெட்டி தங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது என ஷூகர்பெர்க் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் பிரபலப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்