கொழும்பு,
கொழும்புவில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு படை யினர் மற்றும் மந்திரிகள், எம்.பி.க்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளது.
அந்த எச்சரிக்கை தகவலில், பயங்கரவாதிகள் வேன்களில் குண்டுகளை நிரப்பி வந்து வெடிக்க திட்ட மிட்டுள்ளனர். ராணுவ உடையில் வரும் பயங்கர வாதிகள் இந்த கைவரிசையைக் காட்ட உள்ளனர். எனவே உஷாராக இருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் 2 இடங்களில் இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக அந்த எச்சரிக்கை தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் ஓர் இடம் மட்டகளப்பு என்று தெரிய வந்துள்ளது. மற்றோர் இடம் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் பயங்கரவாதிகள் கொழும்பை தகர்க்கும் வகையில் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. இதனால் கொழும்பில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்