img
img

இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளராக ராணுவ முன்னாள் தளபதி நியமனம் 
புதன் 01 மே 2019 16:30:33

img

கொழும்பு,

ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜினாமாவையடுத்து ராணுவ முன்னாள் தளபதி கோட்டேகோடா அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். உளவுத்துறை எச்சரிக்கைகளை அரசு சரியான முறையில் கையாளாததால் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய உயிரிழப்புகளுக்காக அந்நாட்டு மக்களிடம் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பகிரங்க மன்னிப்பு கேட்டார். 

எச்சரிக்கை கிடைத்தும் உரிய முறையில் செயலாற்ற தவறிய பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறு அதிபர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சி.டி. விக்கிரமத்தினே-வை தற்காலிக இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நேற்று காலை அதிபர் சிறிசேனா அறிவித்தார். 

அதைதொடர்ந்து, ராணுவ முன்னாள் தளபதி எஸ்.ஹெச்.எஸ். கோட்டேகோடா-வை பாதுகாப்புத்துறைச் செயலாளராக நியமனம் செய்து அதிபர் மைத்ரி பாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img