கொழும்பு,
பெரும்பாலான சதிகாரர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம் என்றும் இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிறிய அமைப்பாக இருந்தாலும், நன்கு பயிற்சி பெற்ற அமைப்புதான் இலங்கை குண்டுவெடிப்பை நடத்தி உள்ளது. அதனுடன் தொடர்புடைய பெரும்பா லானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தயாராகிவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் உதவ வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில், மனித வெடிகுண்டாக தயாராக இருந்தவர்கள், போலீசாரை எதிர்கொண்டபோது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பயங்கர வாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக புதிய, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். விசா வாங்காமல் இலங்கையில் மத பிரசங்கம் செய்பவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என ரணில் கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்