வாஷிங்டன்,
அமெரிக்காவில் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி விசா பெற்று செல்கிறார்கள். ஆனால் விசா காலம் முடிந்தும் அவர்களில் பலரும் தாய்நாடு திரும்புவதில்லை. அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி விடுகின்றனர்.இது அமெரிக்கா வுக்கு பெரும் சுமையாக அமைகிறது. அப்படி காலம் கடந்து அமெரிக்காவில் தங்கியுள்ள பிற நாட்டினர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுப்பது வாடிக்கை.
இந்தியர்கள்கூட கடந்த காலத்தில் இப்படி விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கி இருந்த நிலையில் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து விமானங்கள் போய் அவர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளன.இப்படி ஏராளமான பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவில் விசா காலம் முடிந்து இன்னும் அங்கு தங்கி உள்ளனர். அவர்களை நாடு கடத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.
ஏற்கெனவே கயானா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, கினியா, சியரா லியோனே, மியான்மர், லாவோஸ் ஆகிய 8 நாடுகள் அமெரிக்காவின் தடை பட்டியலில் உள்ளன. இப்போது இந்த நாடுகளுடன் சேர்த்து பாகிஸ்தானையும் கானாவையும் தடைப்பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. இதற்கான நடவடிக்கை கடந்த 22-ந்தேதி எடுக்கப்பட்டு இருக்கிறது. இனி பாகிஸ்தானியர்கள் அமெரிக்க விசாவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான தூதரக உறவில் மாற்றம் ஏதும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்