கொழும்பு,
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று மூன்று கிறிஸ்துவ ஆலயங்கள், மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் இதுவரை 253 பேர் உயிரி ழந்துள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே, கல்பிட்டியா போலீசார் மற்றும் கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுப ட்டு உள்ளனர். இதில், 40 வயது தமிழ் வழி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 சிம் கார்டுகளும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று வவுனியா நகரில் ராணுவம் மற்றும் போலீசார் சோதனை நடத்தி சந்தேகத்திற்குரிய 10 பேரை கைது செய்தனர். இதேவேளையில், கல்லி நகரில் டேம்கிடாரா பகுதியில் நடந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பள்ளிக்கூட முதல்வர். மற்றொருவர் மருத்துவர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை சந்தேகத்திற்குரிய வகையிலான 106 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்