மாஸ்கோ,
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஷ்ய அதிபர் புதினும் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு அமெரிக்காவுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்புடன் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ள நிலையில், தனது நட்பு நாடான ரஷ்யாவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியதை அடுத்து அவர் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு எரிச்சலை தரும் ரஷ்யாவுடன் வரலாற்றில் முதன்முறையாக கிம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். முன்னதாக கிம், தனது பிரத்தியேக பச்சை நிற ரயில் மூலம் ரஷ்யாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டாக்கில் உள்ள கசான் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, வடகொரியாவின் முன்னேற்றம் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்