கொழும்பு,
இலங்கையில் மேலும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய தேவாலயங்கள் மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டப்பட்டு இருப்பதாகக் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே, இலங்கை காவல் துறை தலைவர் எச்சரிக்கை செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இலங்கை காவல் துறை தலைவர் புஜன் ஜெயசுந்தரா கடந்த 11ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், ‘வெளிநாட்டு உளவு அமைப்பு அளித்த தகவலின்படி, ’தேசிய தவ்ஹீத் ஜமாத்’ அமைப்பு, முக்கிய தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். இந்திய உளவு அமைப்புதான் இத்தகவலை இலங்கை காவல்துறைக்கு அளித்ததாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அதற்கேற்றாற் போல் நேற்று முன் தினம் குண்டுவெடிப்பை தொடர்ந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்