பாக்தாத்,
ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் 7 பேர் பலியானார்கள். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார்.
ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவ டிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டியாலா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சிலரை சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 7 தலைவர்கள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்