வாஷிங்டன்,
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் குறிப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். இலங்கையில், ஈஸ்டர் தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு களில், 225 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பல நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் நடத்த ப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இதில் 138 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்று அவர் பதிவிட்டார்.
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் பதிவிட்ட டிரம்பை, சமூக வலைதள வாசிகள் கேலி செய்து வருகின்றனர். இதனை யடுத்து அவரது டுவிட்டர் பதிவு 138 பேர் என திருத்தம் செய்யப்பட்டது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்