வாஷிங்டன்,
அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பலத்த புயல் தாக்கியது. அலபாமா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. தொடர்ந்து பலத்த மழை பெய்ததில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிப்பி, லிங்கன் மாவட்டத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான ஆடவர் சிக்கிக்கொண்டார்.
படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் புயல் காற்றுக்கு மத்தியில் வாகனங்கள் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.அலபாமாவில் 42 வயதான பெண் ஒருவர் வீட்டின் மீது மரம் விழுந்து பலி ஆனார். புயல் பாதித்த மாநிலங்களில் புயல் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்