பெஷாவர்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான், அரசியல் களத்தில் குதித்தார். கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை தொடங்கினார். படிப்படியாக கட்சியை வளர்த்து, 22 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். தற்போது பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை திடீரென நாட்டின் நிதி அமைச்சராக இருந்து வந்த ஆசாத் உமரை இம்ரான்கான் நீக்கினார். புதிய நிதி அமைச்சராக அப்துல் ஹபீஸ் ஷேக்கை நியமித்தார். அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்களை செய்து உள்நாட்டு அரசியலை இம்ரான்கான் பரபரப்புக்கு உள்ளாக்கினார்.
இதனிடையே, ஓரக்ஜாய் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், எனது ஒரே நோக்கம், நாட்டின் முன்னேற்றம் மட்டும்தான். அதற்காகத்தான் எனது அணியில் மாற்றங்களை செய்தேன். நாட்டுக்கு பயன்படாத அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள். ஒரு நல்ல கேப்டன், தொடர்ந்து தனது அணியின் மீது கண்களை வைத்திருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்வேன் என்று அதிரடியான அறிவிப்பைச் செய்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்