அபுதாபி,
அபுதாபியில் நடந்த இந்து கோவில் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் அமீரக மந்திரிகள், இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது. இதற்காக மொத்தம் 10.9 ஹெக்டர் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது.
இவ்வாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அபுதாபியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது அமீரகம் வந்திருந்த பிரதமர் மோடி, கோவில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் மாதிரியை துபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது காணொ ளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக 50-க்கும் மேற்பட்ட சாமியார்கள் இந்தியாவில் இருந்து சென்று இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமீரக சுற்றுச்சூழல் துறை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி, அமீரக உயர் கல்வித்துறை துணை மந்திரி அகமது பெல்கோல் அல் பலாசி மற்றும் அமீரக சமூக மேம்பாட்டுத்துறை இயக்குனர் டாக்டர் முகீர் அல் கலிலி ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல் இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி மற்றும் இந்திய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், இந்திய மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அமீரகத்தில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் மொத்தம் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய கிழக்கு பகுதியில் கட்டப்பட இருக்கும் முதலாவது இந்து கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெருகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்