இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இலங்கை மக்கள் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இலங்கை மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நேற்று மாலை நடத்தினார்.
அதிபரும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சே கூறுகையில், குண்டு வெடிப்புச் சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல். கொழும்பு கொச்சி கடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டேன். இந்த நேரத்தில் பொதுமக்கள் அமைதிகாத்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி. இதுபோன்ற சம்ப வங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்