சியோல்,
சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை வடகொரியா சோதித்து பார்த்தது. சக்தி வாய்ந்த போர் தளவாடங்கள் அடங்கிய புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் நேரில் கண் காணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை ஆகும்.
வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில் சில பணிகள் நடப்பதாக செயற்கைகோள் படங்களில் தெரிய வந்ததாக தகவல் வெளியான நிலையில், புதிய சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. ஆனால், தென்கொரியா இந்த சோதனை தொடர்பாக எந்த ரேடார் தகவல்களையும் பெறவில்லை. எனவே, ஏவுகணை சோதனையாக இந்த சோதனை இருக்காது என்று நம்பப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்